Home இலங்கை சமூகம் தென்மராட்சி மக்களின் முதல் வெற்றி: வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள பதிவு

தென்மராட்சி மக்களின் முதல் வெற்றி: வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள பதிவு

0

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும் என்ற மகாபாரத வசனத்தை பதிவிட்டுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, மின்பிறபாக்கி கிடைத்தமை தமது வெற்றி அல்ல எனவும் அது மக்களின் வெற்றியே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் சார்பாக இந்த மின்பிறப்பாக்கியை வழங்கியமை தொடர்பாக அங்கஜன் இராமநாதனுக்கு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்கால வெற்றிகளுக்காக பிரார்த்திப்பதாகவும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் இருந்தும் நற்செய்திகளை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு பிரச்சினை

அத்துடன், அனைத்து அரசியல்வாதிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், மற்றுமொரு பிரச்சினையையும் கையிலெடுப்பதற்கான தைரியம் வந்துள்ளதாகவும் தனது முகப்புத்தகப் பதிவில் கூறியுள்ளார்.

மேலும், அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

Source: https://ibctamil.com/article/dr-archuna-chavakachcheri-hospital-issue-1720621474

NO COMMENTS

Exit mobile version