Home இலங்கை சமூகம் வைத்தியர் அர்ச்சுனாவின் மாற்றம் : பதில் வைத்திய அத்தியட்சகர் வழங்கியுள்ள உறுதி

வைத்தியர் அர்ச்சுனாவின் மாற்றம் : பதில் வைத்திய அத்தியட்சகர் வழங்கியுள்ள உறுதி

0

மத்திய அரசினால் தரப்பட்ட கடிதத்தின் உண்மை தன்மை தனக்கு தெரியாதென்றும், தான் மத்தியரசிடம் சென்று கேட்ட போது தனக்கு அந்த கடிதம் வழங்கப்படவில்லையென்றும் வைத்தியர் இராமனாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்ததாக சாவகச்சேரி வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் (Gopalamurthy Rajiv) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வைத்தியர் அர்ச்சுனா அத்தியட்சகர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியதுடன் தொடர்ச்சியாக என்னை கடமையாற்றுமாறு அவர் கூறிவிட்டு சென்றுள்ளார்.

வைத்தியசாலை பணிகள்

அத்தோடு, வைத்தியசாலை பணிகள் வழமை போன்று நடைபெற்று வருவதுடன் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நோயாளர்கள் அவர்களுக்கான சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்கள் உட்பட அணைத்து உத்தியோகஸ்தர்களும் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/HMnZ2cPJhOg

NO COMMENTS

Exit mobile version