Home இலங்கை சமூகம் இலங்கைக்கு கடத்த இருந்த இரண்டு தொன் உலர்ந்த இஞ்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த இரண்டு தொன் உலர்ந்த இஞ்சி பறிமுதல்

0

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்படவிருந்த  உலர்ந்த இஞ்சி மூட்டைகளை தமிழ்நாடு – ராமநாதபுரம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ராமநாதபுரம்
கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோத பொருட்கள் கடத்தவிருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோப்புவலசை கடற்கரை பகுதியில் 50 சாக்கு மூடைகளிர் சுமார் இரண்டு
தொன் எடை கொண்ட உலர்ந்த இஞ்சி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பொலிஸார்

இதையடுத்து உலர்ந்த இஞ்சி மூட்டைகளை பறிமுதல் செய்த ராமநாதபுரம் பொலிஸார் அதனை
திருப்புல்லாணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த இஞ்சியின் மதிப்பு 10 இலட்சம் இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version