Home இலங்கை சமூகம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

0

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்வது குறித்து உடனடி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

“2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்து செய்யப்படும்” என்ற தலைப்பில் சமீபத்தில் பல தேசிய செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தாலும், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதி பத்திரங்களுக்குப் பதிலாக புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version