Home இலங்கை சமூகம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

0

அச்சிடுவதற்குத் தேவையான அட்டைகள் இல்லாததால் வழங்க முடியாத நிலையிலிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கிட்டத்தட்ட மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்பட உள்ளதாக தெரியவருகிறது. 

அச்சிடும் பணி

இந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி வேரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையின் தலைமை அலுவலகத்திலும், ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரத்தில் உள்ள அலுவலகங்களிலும் நடைபெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தினமும் கிட்டத்தட்ட 6,000 சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார். 

சாரதி அனுமதிப்பத்திர விநியோகம்

பொது சேவையின் கீழ் 4,500 சாரதி அனுமதிப் பத்திரங்களும், ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 சாரதி அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்படும்.

அச்சிட முடியாத நிலையில் இருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அடுத்த 2 வாரங்களுக்குள் அச்சிட்டு விநியோகிக்க முடியும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version