Home இலங்கை சமூகம் ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதில் சேமிக்கப்பட்ட பெருந்தொகை நிதி

ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதில் சேமிக்கப்பட்ட பெருந்தொகை நிதி

0

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஓட்டுநர் உரிமம் அச்சிடும் மென்பொருளைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரூ. 156 மில்லியனால் குறைக்க முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, அதற்கான ஒப்பந்தம் கடந்த 13 ஆண்டுகளாக ரூ. 184 மில்லியனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், முறையான டெண்டர் செயல்முறைக்குப் பிறகு ரூ. 28 மில்லியனுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்த விலையில் டெண்டர்

ஓட்டுநர் அடையாள அட்டைகளுக்கான டெண்டரை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இதுவரை 800,000 ஓட்டுநர் அடையாள அட்டைகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும தெரிவித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version