Home இலங்கை சமூகம் ட்ரோன் பறக்க விடுவது குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ட்ரோன் பறக்க விடுவது குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

அனர்த்தங்கள் காரணமாக தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவைகள் இடம்பெறும் இடங்களில் ட்ரோன் பறக்க விட வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியாகவும் பொழுது போக்கு நோக்கிலும் ட்ரோன் இயக்குநர்களுக்கும் உத்தியோகபூர்வ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் வலியுறுத்தல் 

சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் உள்ளிட்ட வான்வழி நடவடிக்கைகளில் ஈடுபடும் ட்ரோன் இயக்குநர்கள், அவசர சேவைகளுக்காக இயக்கப்படும் விமானங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியதையும், அதன்மூலம் விமானப் பாதுகாப்பு மற்றும் பணிகளின் தடையற்ற செயல்பாடு உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அவசரகால முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும், வான்வெளி பாதுகாப்பை பேணவும், அனைத்து ட்ரோன் இயக்குநர்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version