Home உலகம் ஈராக்கில் அமெரிக்க கூட்டணி படைகளின் தளம் மீது ஆளில்லா விமான தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்க கூட்டணி படைகளின் தளம் மீது ஆளில்லா விமான தாக்குதல்

0

ஈராக்கின்(iraq) அன்பர் மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப்படைகளின் தளம் மீது செவ்வாய்க்கிழமை ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஒரு ஆளில்லா விமானம் தளத்திற்கு வெளியே பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது, இரண்டாவது தளத்திற்குள் வீழ்ந்தபோதிலும் எந்த காயங்களும் சேதமும் ஏற்படவில்லை என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இஸ்லாமிய எதிர்ப்பு கூட்டணி

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் இஸ்லாமிய எதிர்ப்பு கூட்டணி, சமீபத்திய மாதங்களில் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான துருப்புக்களுக்கு எதிராக 175க்கும் மேற்பட்ட ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக தாக்குதல்கள்

காஸாவில் தொடரும் போரினை நிறுத்தக் கோரி, பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அது கூறுகிறது.

ஈராக் மற்றும் அண்டை நாடான சிரியாவின் பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்றிய ஐ.எஸ் (IS) அமைப்பை எதிர்த்துப் போராட 2014 இல் ஈராக் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த கூட்டணி ஈராக்கிற்கு அனுப்பப்பட்டது. 

NO COMMENTS

Exit mobile version