பறிமுதல்
செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி படகு டிக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்திற்கு
கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தெற்கு கடலில் போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் குறித்த படகு பறிமுதல் செய்யப்பட்டது.
ஐந்து பணியாளர்கள் படகில் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கண்டுபிடிப்பு
கந்தர துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றதாகக் கூறப்படும், இந்த படகில்
இருந்து ஹெரோயின் மற்றும் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) அடங்கிய 11 பொதிகளை
அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் போதைப்பொருட்களின் பெறுமதியை அளவிடும் பணிகள் இடம்பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
