Home இலங்கை குற்றம் இந்தியாவில் இருந்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை : யாழில் அதிரடியாக இருவர் கைது

இந்தியாவில் இருந்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை : யாழில் அதிரடியாக இருவர் கைது

0

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமான முறையில் படகில் இந்தியா சென்று வந்த இருவர் யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் வைத்து யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்து கைது நடவடிக்கை நேற்று(19.11.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

​கைதான இருவரும் படகில் இந்தியா சென்று வந்ததற்கான ஆதாரத்தை, ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை

இந்தியா சென்று கஞ்சாவுடன் யாழ் நோக்கி படகு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைகப்பெற்ற போதிலும் மீட்கப்பட்ட படகில் போதைப்பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை எனவும்
கடலுக்குள் வைத்துப் போதைப் பொருட்கள் கைமாற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன், மேற்படி நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டிற்காக குருநகர் கடற்கரைப் பகுதியில் மோட்டார் சைக்கிளுடனும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து இரண்டு மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருப்பதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட படகின் உரிமையாளர் ஏற்கனவே 300 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் எனவும்
​ குறித்த குற்றவாளியினுடைய மருமகனே இவ்வாறு இந்தியாவுக்குச் சட்டவிரோதமாகச் சென்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​கைதான மூன்று சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version