தற்போது பச்சிளைப்பள்ளி பகுதியில் சட்டவிரோத
செயற்பாடுகள் அதிகம் இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுபடுத்த முடியாமல்
உள்ளதாகவும் பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இதற்கு முழுமையான காரணமாக இருக்கும் பொலிஸார் பச்சிளைப்பள்ளி
பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுடன்
பச்சிளைப்பள்ளி பொலிஸார் நல்ல உறவு முறையில் உள்ளனர்.
அதிகாரிகளின் அசமந்தபோக்கு
பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அண்மை காலங்களில் சட்ட
விரோதமான மணல் அகழ்வு அதிகம் இடம் பெற்று வருகின்றன.
இப்பிரதேசத்தில்
மட்டுமன்றி வடக்கில் பல பிரதேசங்களில் மணல் அகழ்வு நடவெடிக்கைகள் மிகவும்
மோசமாக நடைபெருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் பொலிஸ்மா அதிபருக்கு தவிசாளர் கடிதம் ஒன்று
எழுதி உள்ளதாகவும் அதில் பச்சிளைப்பள்ளி பொலிசாரின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
