பொலிஸ் அதிகாரிகள் சிலர் மது போதையில் உறங்குவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்களே இவ்வாறு மது போதையில் காணப்பட்டதாகவும், அவர்களுள் இருவருக்கே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரிகள் சிலர் சீருடையுடன் மது அருந்திவிட்டு போதையில் உறங்குவது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
தீவிர விசாரணை
@tamilwinnews கடமை நேரத்தில் மதுபோதையில் ஆழ்ந்த உறக்கம் : வசமாக சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்! ##Lankasri #Tamilwin #Srilanka #Policeofficer #anurakumaradissanayaka ♬ original sound – தமிழ்வின் செய்திகள்
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, குறித்த அதிகாரிகள், பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சிலரே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக,பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
அத்துடன் குறித்த உத்தியோகத்தர்கள் மதுபோதையில் தான் இருந்தார்கள் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் பொறுப்பேற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் ஒரு கட்டமாகவே, குறித்த காணொளியில் தோன்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தற்போதைய விசாரணைகளின்படி, இந்த சம்பவம் வேறொரு தனியார் இடத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
