நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Mi-17 உலங்கு வானூர்தி ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும்
வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது.
இடைத்தங்கல் முகாம்
இதில் அதிகம் கொத்மலை பகுதியில் பாதிக்கப்பட்ட பொது மக்களை தற்காலிக
இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று (02) குறித்த உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் நுவரெலியா
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நுவரெலியா மாநகரசபை மைதானத்தில் இருந்து
கொத்மலையில் உள்ள காமினி திசாநாயக்க மைதானத்திற்கு விசேட வானூர்தி மூலம்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன்
தெரிவித்தார்.
