Home விளையாட்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: நடைபெறவிருக்கும் நாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: நடைபெறவிருக்கும் நாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம்

0

ஐசிசி (ICC) மகளிர் ரி20 உலகக் கோப்பை 2024 ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெறவுள்ளதை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) உறுதி செய்துள்ளது.

குறித்த போட்டிகள், எதிர்வரும் ஒக்டோபர் 03ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை துபாய் (Dubai) மற்றும் சார்ஜாவில் (Sharjah) நடைபெறவுள்ளன.

போட்டி தொடர்கள் பங்களாதேஷில் (Bangladesh) நடைபெறவிருந்த நிலையிலேயே தற்பொழுது இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செயல் அதிகாரி

இது தொடர்பில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜியோஃப் அலார்டிஸ் (Geoff Allardice) கூறுகையில், “இவ்ருட மகளிர் ரி20 உலகக் கோப்பை தொடரை பங்களாதேஷில் நடத்த முடியாமல் போனமை மிகுந்த வருத்தமளிக்கின்றது.

போட்டித் தொடரை, பங்களாதேஷில் நடத்துவதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்ததற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள குழுவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

எனினும், போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின், பயண ஆலோசனைகள் காரணமாக, போட்டிகளை பங்களாதேஷில் நடத்துவது சாத்தியமற்தாக காணப்படுகின்றது.

சிறிலங்கா மற்றும் சிம்பாப்வே

எதிர்காலத்தில் பங்களாதேஷில் ஐசிசியின் உலகளாவிய நிகழ்வை நடாத்துவதற்க நாங்கள் எதிர்பார்கின்றோம்.

பிசிபி, சிறிலங்கா (Sri Lanka) மற்றும் சிம்பாப்வே (Zimbabwe) நாடுகள் சார்பாக போட்டிகளை நடாத்த முன்வந்ததற்காக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version