Home இலங்கை சமூகம் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு : கிண்ணியா விவசாயிகள் கவலை!

வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு : கிண்ணியா விவசாயிகள் கவலை!

0

கிண்ணியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட, மகாமாறு
குளத்துக்கட்டு வீதி, கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பயணம் செய்ய
முடியாத அளவுக்கு படுமோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள்
தெரிவித்துள்ளனர்.

இந்த வீதி கல்லடிவெட்டுவான், சுங்கான்குழி, நடுவூற்று, குரங்குபாஞ்சான்
மற்றும் தீனேரி ஆகிய விவசாய கிராமங்களை இணைக்கின்ற ஒரு முக்கியமான வீதியாகும்.

இந்த விவசாய கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் மேட்டு நில பயிர்ச்செய்கை, கால்நடை பண்ணைகள் என
கிண்ணியா பிரதேசத்தின் பொருளாதார முதுகெலும்பு இந்தப் பகுதியிலேயே
அமைந்துள்ளது.

இதன் காரணமாக, நாளாந்தம் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் சிறு கைத்தொழில்
உற்பத்தியாளர்களும் இந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பித்திருக்கின்றது. இந்த வீதியின் ஊடாகவே நெல்லை
ஊருக்குள் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஆனால் உழவு இயந்திரம் சேற்றுக்குள்
புதைகின்றது. இதனால் போக்குவரத்து செலவு அதிகமாகின்றது.

இந்த நிலையில்,
நெல்லுக்கு போதுமான நிர்ணயவிலை இல்லை. இதனால் நாங்கள் நட்டமடைகிறோம் என
விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….

NO COMMENTS

Exit mobile version