Home இலங்கை குற்றம் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

0

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹெவ்லோக் சிட்டி அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியொன்றின் வீடொன்றில் தங்க மூலாம் பூசப்பட்ட ரி56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டிருந்தது.

 ரி56 ரக துப்பாக்கி

இந்த சம்பவம் தொடர்பில் துமிந்த திஸாநாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட துமிந்தவிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பம்பலப்பிட்டி பிரதேச அடுக்குமாடி வீடொன்றிலில் வைத்து துமிந்தவை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version