Home இலங்கை சமூகம் சிறையில் இருக்கும் நண்பர்களை பிரிந்து வந்ததால் துயரமடைந்த துமிந்த

சிறையில் இருக்கும் நண்பர்களை பிரிந்து வந்ததால் துயரமடைந்த துமிந்த

0

நான் சிறைச்சாலையில் இருந்த 54 நாட்களே என் வாழ்க்கையில் சந்தோசமாக இருந்த காலமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.

நேற்று(14) பிணையில் விடுக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் எனக்கு கிடைத்த நண்பர்களை பிரிந்து வருவது தொடர்பில்  தான் கவலையடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஹாவட் பல்கலைக்கழகம் சென்றாலும் புத்தக கல்வியை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சமுதாயக் கல்வியை பெற்றுக் கொள்ள முடியாது.

அரசியல் வாழ்க்கை

எனது 46 வயதில் 25 வருட அரசியல் வாழ்க்கையில் பெற்றுக் கொள்ள முடியாத வாழ்க்கை அனுபவங்களை அறிந்து கொண்டே வெளியில் வந்துள்ளேன்.

சிறைச்சாலையில் ஈழ விடுதலைப் போராளிகள், ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களின் ஈடுபடும் கும்பல்களின் பிரதானிகள், போதை கடத்தல் முற்றும் முதலாளிகளுடன் ஒன்றாக சாப்பிட்டு படுத்துறங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version