உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்தாண்டு நிறைவில் உயிரிழந்த அனைத்து உயிர்களையும் இலங்கை நினைவு கூர்ந்து வரும் நிலையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் கண்டிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அத்தோடு, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர், சந்தோஷ் ஜா, 2019 இல் தற்கொலைத் தாக்குதல் தளங்களில் ஒன்றான புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பிரார்த்தனை விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
தலைமை யாராக இருந்தாலும் தலைவர் நிலைபாட்டில் காய் நகர்த்தும் சுமந்திரன்
இந்திய கண்டனம்
அதன்படி, குறித்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலங்கை மக்களுடனும் இந்தியா ஒத்துழைப்பு வெளிப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடனும் ஏனைய 🇱🇰 மக்களுடனும் 🇮🇳 என்றும் துணைநிற்கின்றது. எங்கும் எல்லா இடங்களிலும் சகல வெளிப்பாடுகள் மற்றும் வடிவங்களிலுமான பயங்கரவாதத்தை நாம் கண்டிக்கின்றோம்.
— India in Sri Lanka (@IndiainSL) April 21, 2024
மேலும், எங்கும் எல்லா இடங்களிலும் சகல வெளிப்பாடுகள் மற்றும் வடிவங்களிலுமான பயங்கரவாதத்தை கண்டிப்பதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் X தளத்தில் பதிவிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் விஜயம்
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கை மக்களுக்கு, ஒத்துழைப்பை வெளிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 2019 இல் ஒரு குறுகிய பயணமாக கொழும்பை வந்தடைந்தார்.
தனது பயணத்தின் போது, புனித அந்தோணியார் தேவாலயத்தில் உயிர்த்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, நாட்டின் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடினார் என்றும் இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தினர்: சந்தேகம் கொள்ளும் சாணக்கியன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |