Home இலங்கை சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

0

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில்  நிச்சயம் நீதி
நிலைநாட்டப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முக்கியமான விசாரணை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும், சட்டமா அதிபர் திணைக்களத்தினரும்
கூட்டாகச் செயற்பட்டு வருகின்றனர்.

பிரதான சூத்திரதாரி யார் என்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் குற்றப்
புலனாய்வுத் திணைக்களம் பல முக்கியமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

பிரதான
சூத்திரதாரிகளை மட்டுமல்ல, அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களையும் நாங்கள்
நீதியின் முன்பாக நிறுத்துவோம்.

கத்தோலிக்க மக்களின் கவலைகளும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின்
அதிருப்தியும் நியாயமானவை. அவரின் கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.
எமக்கும் கால அவகாசம் அவசியம். எது எப்படி இருந்தாலும் நிச்சயம்
பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version