Home இலங்கை அரசியல் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்து விட்டீர்களா..! அரசிடம் சஜித் கேள்வி

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்து விட்டீர்களா..! அரசிடம் சஜித் கேள்வி

0

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன்
தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என தேசிய மக்கள் சக்தி
அரசு உறுதியளித்திருந்தது. குறித்த நபர் கைது செய்யப்பட்டு விட்டாரா என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட குழு நிலை
விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வினா
தொடுத்தார்.

சூத்திரதாரி கைது செய்யப்பட்டுவிட்டாரா

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது
செய்யப்படுவார் என கொழும்பு பேராயரிடம் இந்த அரச தரப்பினர்
உறுதியளித்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் வெளியிடப்படும் எனவும் இவர்கள்
குறிப்பிட்டிருந்தனர்.

அவ்வாறு நடந்ததா? சூத்திரதாரி கைது செய்யப்பட்டுவிட்டாரா  என்று கேள்வி எழுப்பினார்.

NO COMMENTS

Exit mobile version