உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போதைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக மேலும் பல வழக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கோட்டாபய அரசாங்கத்தினால் பெயரிடப்பட்ட நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேர் தற்போதைக்கு ஆறுவருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை
அவர்களுக்கு எதிராக பதின்மூன்றாயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
குறித்த வழக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தின் மூன்று விசேட நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் அமர்வின் முன்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக தகவல்களை மறைத்தல், விசாரணைகளை வேண்டுமென்றே காலதாமதம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மேலும் பல புதிய வழக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
