Home இலங்கை சமூகம் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை: கிழக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை: கிழக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

0

நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை எனவும், நாம் எல்லாரும் இலங்கையர்
மட்டும்தான் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர(Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழர்கள் முஸ்லிம்கள்
எல்லாரும் ஒற்றுமையாக வாக்களித்து வெற்றியை எமக்கு வழங்கியுள்ளனர் என கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று(22.11.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர்
இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் கடமை

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரது பகுதிகளில் எனக்கு தமிழில் கதைப்பதற்கு விருப்பம். திருகோணமலையில் கடந்த
35 வருடங்களுக்கு முன் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தோம்.

தற்போது மாகாண
ஆளுநர் அலுவலகத்தில் அதிகமான நேரங்களில் தமிழில்தான் கடமைகளை முன்னெடுத்து
வருகின்றேன்.

நேற்று ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், நாட்டில் இனிமேல் இன மத
வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும், இனிமேல் நாம் எல்லாரும் இலங்கையர்
மட்டும்தான், என
தெரிவித்துள்ளார்.

இனி நம் அனைவருக்கும் ஒரே நாடு இலங்கை என்ற அடையாளம் மட்டும்தான்.

எனவே கிழக்கு
மாகாணத்தை கட்டி எழுப்ப அனைவரது ஒத்துழைப் பையும் நான் வேண்டி நிற்கின்றேன’’ என்றார்.

NO COMMENTS

Exit mobile version