Home இலங்கை சமூகம் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய தகவல்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய தகவல்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் இரண்டு பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

திருகோணமலை (Trinco) மாவட்டத்திலுள்ள விபுலானந்த மகா வித்தியாலயமும், மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்திலுள்ள இந்து வித்தியாலயமும் வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படுத்தப்படவுள்ள நிலையில் குறித்த பாடசாலைகளுக்கு நாளை முதல் (11) விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்த தகவலை மாகாணக் கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.ஜி.திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

பாடசாலைகள் திறப்பு

அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இரு பாடசாலைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி திறக்கப்படும்.

எனினும், வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் ஏனைய பாடசாலைகளை எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவை 23ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும். 

Source: https://ibctamil.com/article/eastern-province-school-leave-from-tommorrow-1725991323

NO COMMENTS

Exit mobile version