Home இலங்கை சமூகம் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்

கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்

0

Courtesy: H A Roshan

கிழக்கு மாகாண சபையின் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவுடன் நடைபெற்றுள்ளது. 

இதன்போது, அரச நிறுவன  மட்டத்தில் தூய்மை இலங்கை (Clean Sri Lanka) குறித்த விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்துவது தொடர்பில் அமைச்சுகள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், கருத்துரைத்த ஆளுநர், மாகாண சபையால் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு நிறுவனத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டார்.

பழுதடைந்த வாகனங்கள் 

குறிப்பாக தொடர்ச்சியான செலவுகளைக் கட்டுப்படுத்த நிறுவன மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இதன்போது, ஆளுநர் அலுவலகம் இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது எனவும், கடந்த ஆண்டு ஒக்டோபருக்கு முன்பு, அலுவலகத்தின் வாகனங்களுக்கான மாதாந்த எரிபொருள் செலவு 1.62 மில்லியன் ரூபாவாக இருந்தது, அதற்கு பின்னர், மாதாந்த எரிபொருள் விநியோக செலவு, 2 – 3 இலட்சங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழுதடைந்த வாகனங்களை பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பயன்படுத்த முடியாத வாகனங்களை சட்டப்பூர்வமாக ஏலம் விடவும், மாகாண சபைக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களின் பாழடைந்த நிலை குறித்து கவனம் செலுத்தி பராமரிப்பை மேற்கொள்ளவும் மாகாண சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version