Home சினிமா ரோட்டில் நின்று பாடிய உலகப் புகழ் பாடகர்.. பெங்களூர் போலீஸ் செய்த அதிர்ச்சி செயல்

ரோட்டில் நின்று பாடிய உலகப் புகழ் பாடகர்.. பெங்களூர் போலீஸ் செய்த அதிர்ச்சி செயல்

0

உலகப்புகழ் பெற்ற பாடகர் Ed Sheeran தற்போது இந்தியா வந்திருக்கும் நிலையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இன்று அவர் பெங்களூரில் சர்ச் ஸ்ட்ரீட்டில் நின்று அவரது ஹிட் பாடலான Shape of You பாடலை பாட தொடங்கினார்.

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்.. என்ன ஆனது பாருங்க

நிறுத்திய போலீஸ்

எட் ஷீரன் தனது பாடலை பாடத்தொடங்கிய அடுத்த நிமிடமே போலீஸ் வந்து அதை நிறுத்த சொன்னார். அதன் பின் போலீஸ் கேபிள்களை பிடுங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

நெட்டிசன்கள் போலீசை தற்போது தாக்கி பேசி வருகின்றனர். அந்த இடத்தில் பாட எந்த அனுமதியும் தரப்படவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் கொடுத்து இருக்கும் எட் ஷீரன் அங்கு பாட அனுமதி வாங்கி இருந்ததாகவும் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version