Home இலங்கை கல்வி பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்! – செய்திகளின் தொகுப்பு

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்! – செய்திகளின் தொகுப்பு

0

அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் கல்வி கற்கும்
மாணவர்களுக்கு மாணவர் காப்புறுதி திட்டம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர்
சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில்
காப்புறுதியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடும்
போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காப்புறுதியானது இன்று
முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு இதற்காக
7,112 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த
காப்புறுதி மூலம் அரச அல்லது தனியார் வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளுக்கான
சிகிச்சைக்கான நன்மை ரூ. 300,000/- மற்றும் வெளிநோயாளர் சிகிச்சைக்கு ரூ.
20,000/- மற்றும் தீவிர நோய் நன்மையாக ரூ. 1,500,000/- வரை மாணவர்கள் பலனடைய
முடியும் என தெரிவித்துள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version