Home இலங்கை அரசியல் அர்ச்சுனாவிற்கு நாடாளுமன்றில் இழைக்கப்பட்ட அநீதி : சர்ச்சைக்கு எதிர்க்கட்சி விளக்கம்

அர்ச்சுனாவிற்கு நாடாளுமன்றில் இழைக்கப்பட்ட அநீதி : சர்ச்சைக்கு எதிர்க்கட்சி விளக்கம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் உரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து அண்மையில் பலதரப்பட்ட சர்சை எழுந்து இருந்தது.

அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிட்டமையினால் அவருக்கான நேர ஒதுக்கீடு எதிர்க்கட்சியினரின் நேர ஒதுக்கீட்டில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் ஆராய சென்ற அர்ச்சுனா மீது எதிர்கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, சிறப்புகுழு சபாநாயக்கரினால் அமைக்கப்பட்டு இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் சில தடைகள் அர்ச்சுனாவிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து தெரிவித்ததிருந்ததுடன் அர்ச்சுனாவின் கருத்துக்களுக்கு மன்னிப்பும் கோரி இருந்தார்.

இந்தநிலையில், இது தொடர்பிலும், தமிழ் மக்கள் அரசியல் எதிர்காலம், தற்போதைய அரசியல் நகர்வு மற்றும் எதிர்கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய நிலவரம் நிகழ்ச்சி,    

https://www.youtube.com/embed/xknC38N3iDo

NO COMMENTS

Exit mobile version