Home இலங்கை சமூகம் அதிகரித்த கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை

அதிகரித்த கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை

0

நாட்டில் சில பகுதிகளில், கொத்து ரொட்டி, முட்டை ஆப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் மிகவும் அதிகமாக காணப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். 

முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலைகள் ஓரளவுக்கு குறைந்திருந்தாலும் இந்த முட்டை சார்ந்த உணவுப் பொருட்களின் விலை குறைய வில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

கொத்து ரொட்டியின் விலை 

இதேவேளை, ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் தொடக்கம் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. 

பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும் முட்டை ஆப்பம் மற்றும் முட்டை ரொட்டியின் விலைகள் சமமாகவும் அதிகமாகவும் இருப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இது தொடர்பாக சுகர்வோர் அதிகார சபை தலையிட்டு மக்களுக்கு சில சலுகைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நுகர்வோர் கோரிக்கை விடுக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version