Home முக்கியச் செய்திகள் முட்டையின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்..!

முட்டையின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்..!

0

நாட்டின் சந்தையில் முட்டை விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

உற்பத்தி அதிகரிப்பு

உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவடைந்தமையே காரணம் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், ஒரு முட்டையின் விலை 28 ரூபா தொடக்கம் 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/egg-price-reduced-in-srilanka-1727168570?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version