Home இலங்கை சமூகம் முட்டை வாங்க அம்பாறைக்குச் செல்லும் வெளிமாவட்ட மக்கள்

முட்டை வாங்க அம்பாறைக்குச் செல்லும் வெளிமாவட்ட மக்கள்

0

வெள்ளை முட்டை ஒன்றின் விலை 25 ரூபாயாகவும் சிறிய வெள்ளை
முட்டை ஒன்றின் விலை 20 ரூபாயாகவும் அம்பாறை மாவட்டத்தில் விற்பனை
செய்யப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வாகனங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து
சிறிய வண்டிகள் மூலமாக எடுத்த வரப்பட்டுள்ள முட்டைகள் அம்பாறை மாவட்டத்தின்
காரைதீவு சந்தி கல்முனை மாநகர பிரதேசங்களில் முக்கிய சந்திகளில் விற்பனை
செய்யப்பட்டு வருகின்றன.

முட்டை வகைகள்

குறித்த முட்டை வகைகளை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு
செய்து வருவதை காண முடிகின்றது.

எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு இவ்வாறு
வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்வதாக முட்டை
விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் அண்மையில் சந்தை நிலவரம்
பற்றிய சரியான புரிதல் இல்லாத ஒருவரின் விருப்பின் அடிப்படையில் முட்டைகளின்
விலையை குறைக்கப்பட்டமை குறித்து ஊடகங்களில் வெளிவந்த கருத்து தொடர்பில்
மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்கள் நிலவுவதாகவும் இவ்வாறான விடயங்களை
ஊடகங்களில் வெளியிட முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினரை அணுகி செயற்பட வேண்டும்
என முட்டை விற்பனையாளர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version