Home இலங்கை சமூகம் மீண்டும் அதிகரித்த முட்டை விலை

மீண்டும் அதிகரித்த முட்டை விலை

0

நாட்டில் முட்டையின் விலை சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முட்டை ஒன்றின் விலை 55 ரூபாய் தொடக்கம் 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டையின் விலை

இந்நிலையில், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், நாட்டில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையினால் முட்டையின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்த போதிலும், மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version