Home இலங்கை சமூகம் மீண்டும் முட்டை விலை உயரலாம்! எச்சரிக்கும் உற்பத்தியாளர்கள்

மீண்டும் முட்டை விலை உயரலாம்! எச்சரிக்கும் உற்பத்தியாளர்கள்

0

எதிர்வரும் நாட்களில் முட்டையின்(Egg) விலை மீண்டும் உயரலாம் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை, கணிசமாக குறைந்துள்ளது.

அதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

முட்டையின் விலை

இந்நிலையில், முட்டையின் விலை எதிர்வரும் நாட்களில் 20 ரூபாவாக குறையலாம் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரித்துள்ளனர்.

மேலும், முட்டை விலை குறைந்தாலும், முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version