Home இலங்கை சமூகம் கொழும்புத் துறைமுக மனிதப்புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட 8 எலும்புக்கூடுகள்

கொழும்புத் துறைமுக மனிதப்புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட 8 எலும்புக்கூடுகள்

0

கொழும்புத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சியில் இதுவரை எட்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

இவற்றில் இரண்டு எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டு தற்போது காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் கட்ட அகழ்வு 

அத்துடன் இதுவரை இரண்டு கட்ட அகழ்வுப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழாய்வு  நடவடிக்கைள் தொடங்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் எச்சங்களின் தோற்றம் மற்றும் சூழல் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகள்

கடந்த ஜூலை 13ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்குச் செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டும்போது கொழும்புத் துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி அந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/eight-human-skeletons-found-so-far-in-colombo-port-1727928539

NO COMMENTS

Exit mobile version