Home இலங்கை குற்றம் யாழில் மன விரக்தியில் முதியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் மன விரக்தியில் முதியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

0

யாழ்ப்பாணத்தில்(Jaffna) நேற்றையதினம்(8), முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

 பா.ஜோசப் (வயது 86) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார்.

அவரது பிள்ளைகள் மூவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த முதியவர் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடல மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/elderly-man-death-in-jaffna-1741534659

NO COMMENTS

Exit mobile version