Home இலங்கை சமூகம் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு..!

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு..!

0

காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக மகாவிலாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

இந்தச் சம்பவம் அனுராதபுரம் (Anuradhapura), மகாவிலாச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இதில், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே
உயிரிழந்துள்ளார்.

மேற்படி முதியவர் நேற்று (28) தனது வீட்டுத் தோட்டத்துக்கு வந்த காட்டு யானையைத்
துரத்த முயன்றபோது யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/elderly-man-dies-attacked-by-a-wild-elephant-1730175988

NO COMMENTS

Exit mobile version