Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி..!

முல்லைத்தீவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி..!

0

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாந்தை கிழக்கு
மூன்று முறிப்பு இளமருதங்குளம் பகுதியில் யானை
தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (28.10.2024) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இவர் நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியில் வந்தபோதே யானையின் தாக்குதலுக்கு
இலக்காகியுள்ளார்.

சம்பவத்தில் மூன்று முறிப்பு – வீரப்பராயன் குளத்தை சேர்ந்த 68 வயதுடைய
சிவஞானம் ஸ்ரீஸ்கந்தராசா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/family-man-dies-attacked-elephant-in-mullaitivu-1730190212

NO COMMENTS

Exit mobile version