Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் ஏழு நாட்களாக காணாமல் போயுள்ள வயோதிப தாய்

முல்லைத்தீவில் ஏழு நாட்களாக காணாமல் போயுள்ள வயோதிப தாய்

0

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வயோதிப தாயொருவர் ஏழு நாட்களாக காணாமல்
போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த 84 வயதுடைய சலோசியாம்பிள்ளை மேரி
புலோமினா என்ற வயோதிப தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 10.04.2025 முற்பகல் 09.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியவரை தேடும்
பணி ஏழு நாட்களாக தொடர்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் கோரிக்கை 

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில்
அல்லது 0775570692, 0770253210 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு
குடும்பஸ்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதுடன்
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version