யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் தவறி
கிணற்றில் விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை
சேர்ந்த 69 வயதுடைய பெண்ணே இவ்வாறு நேற்று(11.10.2025) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக முயற்சித்த வேளை, கால்
தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகள்
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தியுள்ளனர்.
