காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்(16) அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட ரத்மல்கஹவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு
உயிரிழந்தவர் ரத்மல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஆவார்.
இவர் தனது வீட்டுக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி
உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
