Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு பதிவு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 6 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சட்டங்களை மீறும் சம்பவங்கள் தொடர்பாக நேற்றைய தினம் (23) நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,

1.

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை – தம்புள்ள வீதியின் அலுவிஹாரயிலிருந்து பலாபத்வல சந்தி வரையிலான பகுதிகளில் வேட்பாளர்களின் படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

2.

மாத்தளை – ரத்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை – ரத்தோட்டை வீதியின் கைகாவல முதல் ரத்தோட்டை வரையிலான பகுதியில் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் கொடிகள் காட்சிப்படுத்தப்படுவது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

3.

மாத்தளை – ரத்தோட்டை பொலிஸ் பிரிவில் வேட்பாளர்களின் படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

4.

கெப்பித்திகொல்லாவ – மதவாச்சி பொலிஸ் பிரிவில் உலர் உணவு விநியோகம் தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

5.

பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வேட்பாளர் ஒருவர் பிரதான வீதியில் புதிய தெருவிளக்குகளை பொருத்துவது தொடர்பாக பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

6.

மொனராகலை – விஹார மாவத்தை,மொனராகலை வீதியில் வேட்பாளர் ஒருவரின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version