Home இலங்கை சமூகம் தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

0

250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் ஓரளவு நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.

இதனிடையே நாளை (06) தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

இம்முறை தபால்மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுகின்றன.

தபால்மூல வாக்களிப்பு

தபால்மூல வாக்குச்சீட்டுகளை எதிர்வரும் 7ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23, 24ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் ஏப்ரல் 28, 29 ஆகிய தினங்களில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version