Home இலங்கை சமூகம் இதுவரை 597 முறைப்பாடுகள் பதிவு: தேர்தல் ஆணைக்குழு

இதுவரை 597 முறைப்பாடுகள் பதிவு: தேர்தல் ஆணைக்குழு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை அறிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலியில் [Election Dispute Resolution (EDR) Mobile இன்று (06) வரை 597 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரு வாரங்களில் பதிவான முறைப்பாடுகள்

புதிய செயலியை அறிமுகம் செய்து 2 வாரங்களில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு கூறியது.

இதில் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக EDR என்ற புதிய செயலி கடந்த மாதம் 22ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version