எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பின் போது வாக்காளர்கள் தவிர்க்க வேண்டிய விடயங்கள் குறித்து தேசிய தேர்தல் ஆணையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிர்தல்
அதன்படி, வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்கவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
