Home இலங்கை சமூகம் கைத்தொலைபேசிகள் பயன்படுத்த தடை! தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவுறுத்தல்

கைத்தொலைபேசிகள் பயன்படுத்த தடை! தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவுறுத்தல்

0

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களுக்கும், வாக்கெண்ணும் இடங்களுக்கும், முடிவுகளை வெளியிடும் இடங்களுக்கும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வருவதையும், அத்தகைய இடங்களில் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு வாக்காளர்களுக்கும், பணியில் ஈடுபடுபவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று (21.09.2024) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் சென்று தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், தேர்தலின் போதான வன்முறை மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவானது வாக்காளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மீட்டியாகொட பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையமொன்றில் இன்று (21) காலை வாக்களிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்களிப்பு நிலையத்திற்கு வந்த அவர், தனது வாக்குச்சீட்டை பெற்றுக் கொண்டு வாக்களித்த பின், அதனை புகைப்படம் எடுக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மீண்டும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version