Home இலங்கை சமூகம் யாழில் அநாவசியமாக ஒட்டப்படும் தேர்தல் சுவரொட்டிகள் : மக்கள் விசனம்

யாழில் அநாவசியமாக ஒட்டப்படும் தேர்தல் சுவரொட்டிகள் : மக்கள் விசனம்

0

யாழில் அநாவசியமாக தேசிய மக்கள் சக்தியின் சுவரொட்டிகளை ஒட்டியதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முள்ளியான் உப அஞ்சல் அலுவலகம்
அமைந்துள்ள கட்டிடத்திலேயே இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின் போதும் கட்டைக்காடு கிராமத்தின் பொது
மண்டபங்களில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு தேர்தல் விதிமுறைகள்
மீறப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம்

இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு
முள்ளியான் உப அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ள கிராம பொது மண்டபங்களில்
ஜனாதிபதியின் சுவரொட்டிகளை ஒட்டி கட்டிடங்களை அலங்கோலம் ஆக்கியுள்ளதாக
அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பொது இடங்களில் அநாவசியமாக சுவரொட்டிகளை
காட்சிப்படுத்துபவர்களை கைது செய்யுமாறும் காவல்துறையினரை அப்பகுதி சமூக ஆர்வலர்கள்
கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


https://www.youtube.com/embed/2k2PHrPOyy0

NO COMMENTS

Exit mobile version