நாளையதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளன.
மட்டக்களப்பு
அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கு வாக்களிக்க தேவையான சகல நடவடிக்கையும்
முடிவுற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமன ஜே.ஜே. முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 689 பேர் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தல் கடமைக்கு 6 ஆயிரத்து 750 பேர் ஈடுபடவுள்ளதுடன் 442 வாக்களிப்பு
நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு
இந்து கல்லூரியில் இடம்பெறும்.
இதில் தபால்மூல வாக்குகளை எண்ணுவதற்காக 9
நிலையங்களும் ஏனைய வாக்குகளை எண்ணுவதற்காக 37 நிலையங்கள் உட்பட 46 நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
செய்தி – பவன், ருசாத்
வன்னி – முல்லைத்தீவு
மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வன்னி தேர்தல் மாவட்டத்தின்
முல்லைத்தீவு தொகுதியில் உள்ள வாக்கெடுப்பு நிலயங்களுக்காக வாக்குப்பெட்டிகள்
நாளை (13) காலை 7.30 மணி முதல் அனுப்பி வைப்பதற்காக ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தொகுதியில் 137 வாக்கெடுப்பு
நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில்
வாக்களிக்கத் தகுதியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 86889 ஆகும்.
செய்தி – சண்முகம் தவசீலன்
நுவரெலியா
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து
நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும்
நுவரெலியா மாவட்ட அரச அதிபருமான நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்திற்கான 08 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய 17
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேட்சை குழுக்களை
பிரதிநிதித்துவப்படுத்தி 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.