Home இலங்கை சமூகம் ஆனையிறவில் சாய்ந்து விழும் நிலையில் மின்சார கம்பம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆனையிறவில் சாய்ந்து விழும் நிலையில் மின்சார கம்பம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

ஏ- 9 வீதியின் ஆனையிறவு உப்பளத்தின் முன் பக்கம் உள்ள இலங்கை மின்சார சபைக்கு
சொந்தமான மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பு கம்பியில்
தொங்கிய நிலையில் கீழே விழாது காணப்படுகிறது.

அபாய நிலை

தற்போது வீசி வரும் காற்றின்
தாக்கத்தினால் மின்கம்பம் நிலத்தில் வீழ்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாய
நிலை உள்ளது.

இது தொடர்பாக இலங்கை மின்சார சபை உடனடி கவனத்தில் கொண்டு மின் விபத்து
ஏற்படாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள்
தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version