இந்த வருடமும் கடந்த வருடமும் மின்சார சபை பெற்ற இலாபத்தின் படி 30% மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க(janaka ratnayake) தெரிவித்துள்ளார்.
ஆனால் 2013 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மின்சார சபை நட்டத்தைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டு, அடுத்த ஆறு மாதங்களுக்கு 5% முதல் 11% வரை கட்டணத்தை குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
முட்டை, அரிசி, தேங்காய் விலை
முட்டை, அரிசி, தேங்காய் ஆகியவற்றின் விலையை அரசால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் கடந்த காலங்களில் மின்சார சபை பெற்ற இலாபம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை 30% குறைத்து நிவாரணம் வழங்க முடியும் என்றார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலமோ அல்லது மூன்றில் இரண்டு பங்கு அதிகாரமோ தேவையில்லை எனவும், அதற்கு மின்சார சபை சரியான கணக்கீடுகளைச் செய்த பிறகு பொதுப் பயன்பாட்டு ஆணையம் முன்மொழிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.