மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையானது, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
இதன்படி மின்சாரக் கட்டணத்தை தற்போதைக்கு குறைக்க கூடாது என மின்சாரசபை தெரிவித்துள்ளது.
தற்போதைய கட்டணங்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரையில் நீடிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சாரக் கட்டணங்கள்
முன்னதாக, வருடாந்தம் நான்கு முறை மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என முன்னாள் அரசாங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்டிருந்தது.
எனினும், 2023 இல், கட்டண திருத்தங்கள் மூன்று முறை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டன, அதே நேரத்தில் இந்த ஆண்டு இரண்டு திருத்தங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு மத்தியில், இலங்கை மின்சாரசபை இன்று முன்மொழிவை சமர்ப்பிக்கப்படாவிட்டால், தாம், சுயாதீனமாக கட்டண திருத்தத்தை முன்னெடுக்கப்போவதாக, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
சமர்ப்பித்துள்ள முன்மொழிவு
இந்தநிலையில் மின்சாரசபை இன்று சமர்ப்பித்துள்ள முன்மொழிவு தொடர்பாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, தமது நிலைப்பாட்டை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் 30 வீத மின்சாரக் குறைப்பு தொடர்பாக, அரசாங்கமும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.