Home இலங்கை சமூகம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்

0

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று(22) வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச மின்சார சபை சட்டமூலத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தி இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்றைய தினம் சுகவீன விடுமுறை போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மின்சார சபை ஊழியர்களின் ஒருங்கிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்ப்புப் போராட்டம்

குறித்த தொழிற்சங்கப் போராட்டத்துக்கு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் 28 ஊழியர் சங்கங்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version